×

தக்கலையில் போலீசார் சோதனை அதிக பாரம் ஏற்றி வந்த 8 டாரஸ் லாரிகள் பறிமுதல்

தக்கலை, மார்ச் 2:  தக்கலை அருகே கனிம வள கடத்தல் தடுப்பு பிரிவு  போலீசார் வாகன சோதனை நடத்தி அதிகபாரம் ஏற்றி வந்த 8 டாரஸ் லாரிகளை பறிமுதல் செய்தனர். குமரி  மாவட்டத்தில் தொடங்கும் மேற்கு தொடர்ச்சி மலை குஜராத் வரை சுமார் 1,500  கிமீ தூரம் அமைந்துள்ளது. இந்த மலை பகுதிகளை பாதுகாக்க, 2 முறை குழு  அமைக்கப்பட்டது. குழுவின் பரிந்துரைப்படி பாதுகாக்கப்பட்ட  பகுதியாக மேற்கு  தொடர்ச்சி மலை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த தடைகளை  கண்டுகொள்ளாமல், பல ஆண்டுகளாக கனிம வள திருட்டு நடந்து வருகிறது. இதனால்  சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, இயற்கை வளம் சிதறடிக்கப்பட்டு, மழை வளம்  குறைந்து வருகிறது. குறிப்பாக கனிம வளங்களை கேரளாவுக்கு கடத்தி வருகின்றனர். அதுபோல  வாகனங்களில் அதிகளவில் பாரம் ஏற்றி கனிம வளங்களை கொண்டு செல்வதும்  ெதாடர்கதையாகி விட்டது. இதனால் சாலைகள் பழுதாகி, விபத்துகள் நடந்து  வருகின்றன.
இந்த நிலையில், கனிம வள கடத்தல் தடுத்தல் பிரிவு  போலீசார் நேற்று காலை தக்கலை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.  அப்ேபாது ேதசிய ெநடுஞ்சாலை வழியாக பாரம் ஏற்றி வந்த வாகனங்களை நிறுத்தி  சோதனை செய்தனர். அதில், ஜல்லி, மணல், கற்கள் என அதிகளவில் பாரம் ஏற்றி  வந்த 8 டாரஸ் லாரிகள் சிக்கின. அவற்றை பறிமுதல் ெசய்த போலீசார்,  தக்கலை காவல் நிலையம் கொண்டு சென்று ஒப்படைத்தனர். இவற்றுக்கு அபராதம்  விதிக்கப்படும் எனவும், இதுபோன்ற ேசாதனைகள் ெதாடரும் எனவும் கனிம வள  கடத்தல் தடுத்தல் பிரிவு ேபாலீசார் தெரிவித்தனர்.

Tags : Thakkala ,
× RELATED தக்கலை அருகே கூலித்தொழிலாளிக்கு கத்திக்குத்து